கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ; சீனாவுடனான எல்லையை மூடியது ஹாங்காங்
04 Feb,2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை ஹாங்காங் மூடியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலக நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் சீன நாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், ஹாங்காங்கையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தன் நாட்டின் சீன எல்லைப்பகுதியை மூடுவதாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் தற்போது வரை 16 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.