கொரோனா வைரஸ்: இதுவரை 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - சீன அரசு தகவல்
01 Feb,2020
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
உலகளவில், சுமார் 12 ஆயிரம் பேர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கொரோனா வைரசால் பாதித்தவர்களை காப்பாற்ற, தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள், முற்றிலுமாக மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.