கொரோனா வைரஸ் : சீனாவுக்கு உதவி கரம் நீட்டிய உலக ஜாம்பவான்கள்
01 Feb,2020
சீன நகரமான வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சீனா பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் மிக நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது. நிலைமை தொடருமாயின் ஏனைய உலக நாடுகளும் மோசமாக பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலைமையை கூடிய விரைவில் கட்டுபடுத்துவதற்கு சீன அரசுக்கு உலகின் ஜாம்பவான்கள் தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.
அந்த வகையில் இந்த நன்கொடைகள் பிரபல நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள செல்வந்தர்களிடமிருந்து வழங்கப்படுகின்றது.
பில் கேட்ஸ்
உலக பணக்காரரான பில் கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சீனாவிலும் ஆபிரிக்காவிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உதவுவதற்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் சர்வதேச ஒத்துழைப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி மேம்பாட்டுக்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அலிபாபா
சீனாவின் இரண்டாவது பணக்காரரான அலிபாபா நிறுவனம், தனது ஜாக் மா அறக்கட்டளை மூலம் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளுக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை (100 மில்லியன் யுவான்) வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை தொற்றுநோய் முதன்முதலில் அறியப்பட்ட மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள வைத்தியசாலைக்கு மிகவும் தேவையான மருத்துவ பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் 144 மில்லியன் அமெரிக்க டொலர் (1 பில்லியன் யுவான்) நிதியை நிறுவப்போவதாக அலிபாபா கடந்த சனிக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சீன தொழில்நுட்ப நிறுவனம்
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான பைடு, டென்சென்ட், ஹவாய் மற்றும் பைட் டான்ஸ் – முறையே பில்லியனர்கள் ராபின் லி, மா ஹுவாடெங், ரென் ஜெங்பை மற்றும் ஜாங் யிமிங் ஆகியோரால் நடத்தப்படுகின்றன
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதாக டிக்டோக்கின் பின்னால் உள்ள பைடு, டென்சென்ட் மற்றும் பைட் டான்ஸ் ஆகியவை இணைந்து 115 மில்லியன் அமெரிக்க டொலர்களை (800 மில்லியன் யுவான்) புதிய சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுக்கு உதவுவதற்கும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
அதே நேரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் ஹூவாய் ஹூஷென்ஷன் வைத்தியசாலைக்கு நிதியுதவி வழங்கியுள்ளன.
பிரான்ஸ் கோடீஸ்வரர்
உலகின் மூன்றாவது பணக்காரரான பிரான்ஸ் கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட் தலைமையிலான ஹெவி-ஹிட்டர்ஸ் எல்விஎம்ஹெச் மற்றும் பிரான்ஸ் கோடீஸ்வரர் பிராங்கோயிஸ் பினால்ட் ஆகியோரால் நிறுவப்பட்ட ஆடம்பர நிறுவனமான கெரிங் ஆகியவை முறையே 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் நன்கொடையாக அளித்துள்ளதாக பினால்ட் பேஷன் தெரிவித்துள்ளது.
சீனா
சீனாவில், சீன கோடீஸ்வரர் டிங் ஷிஹோங் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான ஹூபேயில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு பொருட்களை வழங்க உதவும் வகையில் சீன தொண்டு நிறுவனத்துக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை (10 மில்லியன் யுவான்) வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மைக்ரோசொப்ட்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், டெல், லோரியல் மற்றும் கார்கில் என்பன சீன செஞ்சிலுவை சங்கத்திற்கு சுமார் 4 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை (10 மில்லியன் யுவான்) வழங்குவதுடன் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் அதிகாரிகளுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.