சிரியாவில் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற முனைந்த ரஷ்யா- தடுத்து நிறுத்தியது அமெரிக்கா
24 Jan,2020
சிரியாவில் உள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற நினைத்த ரஷ்யப் படைகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரிய – துருக்கி எல்லையில் உள்ள மிலன் நகரில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களை அணுக முயன்றபோதே அவர்களை அமெரிக்கப் படை தடுத்து நிறுத்தியதாக பெயர் குறிப்பிடாத உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் தமது முயற்சியைக் கைவிட்டு இராணுவ நிலைகளுக்குச் சென்றதாகவும் இரு படைகளுக்கும் இடையே எந்தச் சண்டையும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவிலிருந்து பெரும்பாலான படைகள் வெளியேறி இருந்தாலும் ஐ.எஸ். மற்றும் ரஷ்யப் படைகளிடமிருந்து எண்ணெய் வயல்களைப் பாதுகாக்க அமெரிக்கப் பாதுகாப்புப் படையில் ஒரு சிறு பிரிவு அங்கு முகாமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்திஷ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் எனக் கூறி அவர்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.