சீனாவில் கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவி உள்ளது!
23 Jan,2020
சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உவான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவை மிரட்டும் உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் உவான் நகரில் இந்த வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் உவான் நகரில் உள்ள கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய வைரஸ் உவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸ் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயல்பட்டன.
மத்திய உவானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் கோலாக்கள், எலிகள் மற்றும் ஓநாய் குட்டிகள் விற்கப்படுகிறது.
எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளில் கொரோனா வைரஸ் பரவ மிகவும் சாத்தியமான வனவிலங்கு, நீர் பாம்பு என்று முதன்முறையாக தெரியவந்து உள்ளது மருத்துவ வைராலஜி ஜர்னலில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட புதிய தகவல்கள், கொரோனா வைரசால் தூண்டப்பட்ட நிமோனியாவை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டு உள்ளது.