கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு!
23 Jan,2020
கிரேக்க நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக, கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிரேக்க நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள இவரை அந்நாட்டு பிரதமர் க்ரியாகோஷ் மிட்சோடகிசின் ஜனாதபதி பதவிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கதர்னியை கிரீஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உட்பட 261 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதர்னிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் கிரேக்க குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியாக, 63 வயதான கதர்னி செகலாரோப்லூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாக, பதவியேற்க உள்ளார்.
ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிரேக்கம், ஜனநாயக நாடாக அங்கிகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை அந்நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. தற்போது முதல்முறையாக கதர்னி, பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கதர்னி அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.