அவுஸ்ரேலியாவில் கன மழை பெய்தும் 80 இடங்களில் இன்னும் அடங்காத காட்டுத்தீ!
21 Jan,2020
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் இன்னமும் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களில் மழை பெய்தும் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய பகுதிகளில் 80 இடங்களில் தீ இன்னும் அடங்காமல் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டுத்தீயால் சேதமான பல இடங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் வேகமாக வீசும் காற்றால், சாம்பல் கிளம்பியுள்ளதனால் மேகங்கள் புகை மூட்டமாகவும், வானம் கரு நிறத்திலும் காட்சியளிக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து எரியும் காட்டுதீயால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்;. மேலும் 2000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
10 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கு இரையானது. மேலும், சுமார் ஒரு பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.