ஈரான் வான்பரப்பில் அதிக உயரத்தில் பறக்கவேண்டாம் என எச்சரிக்கை!
13 Jan,2020
ஈரான் வான் எல்லைக்குள் அதிக உயரத்தில் பறப்பதை ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் தவிர்க்க வேண்டும் என ஏசா எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்களின் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தற்போதுள்ள சூழலிலும், மறு அறிவிப்பு வரும் வரையிலும் ஈரானின் வான்பரப்பில் ஐரோப்பிய விமானங்கள் அதிக உயரத்தில் பறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ஈராக்கின் வான்பறப்பில் பறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற முடிவு நீட்டிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களை வரை இந்த அறிவிப்பு நீட்டிக்கலாம் எனத் தெரிவித்துள்ள ஏசா அமைப்பு விரைவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது