ஆல் இஸ் வெல்’’ – இரான் தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து
10 Jan,2020
ஈராக்கில் அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஒஒஎல்லாம் நன்றாக உள்ளது. ஈராக்கில் இரண்டு இராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான இராணுவம் நம்மிடம் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்ஒஒ என்று குறிப்பிட்டுள்ளார்.ஈரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஒஒபிரச்சினையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ ஈரான் கோரவில்லை.
ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்ஒஒ என்று தெரிவித்துள்ளார்.ஒஒஎங்கள் நாட்டு மக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன விதிகளின் 51 ஆம் பிரிவின் படி, எங்களின் சுய பாதுகாப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்ஒஒ என்று அவர் மேலும் தெரிவித்தார்.அமெரிக்கா – ஈரான் இடையேயான பிரச்சினையை மேலும் நீட்டிக்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ட்வீட் செய்தி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் உள்ள அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு முன்னதாக குறிப்பிட்டுள்ளது.
ஒஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும்.
இது குறித்த தகவல்கள் ஜனாதிபதி டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்ஒஒ என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.