துருக்கியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 147 பேர் கைது!
31 Dec,2019
துருக்கியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 40இற்கும் மேற்பட்டவர்கள் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் 20இற்கும் மேற்பட்டவர்கள் சிரியா மற்றும் மொராக்கோ நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தலைநகர் அங்காராவில், வெளிநாடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு உடந்தையாக அல்லது தொடர்பு வைத்திருந்த 50பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னதான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்கள் திரும்பவும் நாட்டுக்கு அனுப்பபடுவர்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சிரியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்ட கால கட்டத்தில் அந்நாட்டுக்கு அரசுக்கு எதிராக செயற்படும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து செல்ல துருக்கி அனுமதித்து வந்தாக குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால், அதன் பிறகு ஐஎஸ் தீவிரவாதிகள்துருக்கியிலும் தொடர்ந்து பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர். இதனால், துருக்கியின் சுற்றுலாத் துறை வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை துருக்கி எடுத்து வருகின்றது.