செயற்கை மதிநுட்பத்தால் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம்
27 Dec,2019
அணு ஆயுத ஏவுகணைகளின் கட்டுப்பாட்டை தன்னியக்க ரீதியில் செயற்படும் செயற்கை மதிநுட்பத்திடம் (செயற்கை மதிநுட்ப உபகரணங்களிடம்) கையளிப்பது அணு ஆயுதப் போரொன்று ஏற்படுவதற்கு வழிவகை செய்யலாம் என உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தன்னியக்க இயந்திரங்களில் தங்கியிருப்பதிலான அதிகரிப்பு இயந்திரங்கள் கட்டுப்பாட்டை இழப்பதற்கு வழிவகை செய்யலாம் என அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள கொர்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புரிந்துகொள்ள முடியாத வகையான ஆபத்து இருக்கின்றபோதும் அமெரிக்காவின் ஆற்றல்களை எட்டிப்பிடிக்க ரஷ்யாவும் சீனாவும் தொழில்நுட்பங்களில் மேலும் நம்பிக்கை வைக்கலாம் எனத் தெரிவித்த மேற்படி விஞ்ஞானிகள், இராணுவ சக்திகள் தொழில்நுட்பத்தில் செயற்கை மதிநுட்பம் பாதுகாப்பான வழிமுறை என நம்பிக்கை வைப்பதானது அது தொடர்பான விபத்தொன்று ஏற்படும் வரையில் பகிரங்கமாக்கப்படாது மறைந்திருக்கும் அபாயமொன்றைக் கொண்டுவரலாம் என எச்சரித்துள்ளனர்.
அந்த வகையில் ரஷ்யா ஏற்கனவே பொஸெய்டன் அல்லது ஸ்ரேட்டஸ்– 6 என்ற தன்னியக்க அணுசக்தி நீர்மூழ்கிக் குண்டொன்றை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து செயற்கை மதிநுட்பம் தொடர்பில் புதிய போக்குகொன்றுக்கு வித்திடக்கூடிய களத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானி கள் தெரிவித்தனர்.