அடுத்த வருடம் மிகவும் மோசமானதாகயிருக்கலாம்- ஐநா அதிகாரி அச்சம்
21 Dec,2019
019 ம் ஆண்டு மிகவும் மோசமானது அடுத்த வருடம் அதனை விட மோசமானதாக காணப்படும், என தெரிவித்துள்ள ஐநாஅதிகாரியொருவர் 2020 இல் காலநிலை மாற்றம் மோதல்கள் காரணமாக பெருமளவானவர்கள் பாதிக்கப்படுவார்கள் அவர்களிற்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் மிகவும் மோசமானது, இந்த வருடம் குறித்த எனது மதிப்பீடுகள் பிழையானவையாகிவிட்டன என ஐக்கியநாடுகளின் நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்க்லொவ்கொக் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 145 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவி தேவைப்படலாம் என கடந்த வருடம் நான் எதிர்பார்த்தேன் ஆனால் 165 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவிதேவைப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னிடம் மாயக்கண்ணாடியில்லை, அடுத்த வருடம் நாங்கள் எதனை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது தெரியாது,ஆனால் 2020 குறித்து என்னிடம் மோசமான எதிர்பார்ப்புகள் உள்ளன என ஐக்கியநாடுகளின் நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்க்லொவ்கொக் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நிலைமை மிக மோசமானதாகயிருக்கும் என நான் நினைக்கின்றேன் அஞ்சுகின்றேன் என அவர்தெரிவித்துள்ளார்.
உதவிகள் தேவைப்படும் மக்களிற்கு அவை சென்றடையுமா என்பதை பூகோள அரசியல்போட்டியே தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் சிரியா மற்றும் வெனிசூலா மக்களின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் கையாள்கின்ற ஒவ்வொருநெருக்கடியிலும் பெண்களும் யுவதிகளும் அங்கவீனர்களுமே மோசமாக பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களே அதிகளவிற்கு மறக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.
பெண்களும் யுவதிகளும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இளம் வயது திருமணம் பாலியல் தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.