முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் ‘ - பாகிஸ்தான் பிரதமர்
19 Dec,2019
இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர்.
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து பல விமர்சனங்கள் தெரிவித்து வரும் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், சர்வதேச அகதிகள் மன்றத்திலும் இந்தியாவின் குடியுரிமை சட்ட திருந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் யூனியர் பிரதேசமாக மாற்றியதைத் தொடர்ந்து, இப்போது நிறைவேற்றியுள்ள சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு வரநேரிடும்.அதுமட்டுமின்றி இருநாடுகளுக்கு இடையே போர் மூள வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு மத்திய அரசு பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.