பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்புக்கு மரண தண்டனை!
17 Dec,2019
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக பதவி வகித்த பர்வேஷ் முஷாரப், 1999 ஆம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
2007- ம் ஆண்டு பாகிஸ்தான் ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த போது அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிராக 2013மே; ஆண்டு தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் பர்வேஸ் முஷாரப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது
73 வயதான பர்வேஸ் முஷாரப் ஏற்கனவே உடல்நிலை பாதிப்பினால் துபாய் மருத்துவமனையில் முஷாரப் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.