சௌதி அரேபிய கால்பந்து ரசிகர்களுக்கு முன்னிலையில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகள் விளையாடின.
ரியாத்திலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகே ஆக்ரோஷமான இளைஞர்கள் காணப்பட்டனர். தங்கள் ஆடையின் ஒரு பகுதியை கழற்றிய அவர்கள் அதனை தலைக்கு மேல் சுற்றிகொண்டிருந்தார்கள்.
சௌதி பெண்களில் சிலர், தங்கள் வாழ்க்கையின் நல்ல பருவத்தை அனுபவித்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலையை மூடும் துணிகள் கறுப்பு கொடிகளாக மாறியிருந்தன.
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டிதான், சௌதி அரேபியாவில் கடந்த 20 ஆண்டுகளில் விளையாடப்பட்ட முதல் கால்பந்து போட்டியாகும்.
ஆனால், முன்பு போட்டி விளையாட்டு நடைபெற்றபோது, சௌதி ஆண்கள் தலையில் சிவப்பு மற்றும் வெள்ளை துணையையும், உடலில் வெள்ளை அங்கியையும் அணிந்து இருந்தனர். ஒரு பெண் கூட கறுப்புநிற அபாயா அணியாமல் அப்போது இருக்கவில்லை.
முந்தைய ரியாத் எப்படி இருந்தது?
அப்போதைய ரியாத் “உள்நோக்கு” எனப்படும் வெளிப்படையற்ற தன்மையுடையதாக இருந்தது. பிறரை வரவேற்காத நிலையில் இருந்த இந்த நகரத்தில் வணிக வளாகங்கள் இருக்கவில்லை.
அழுக்கு நிறைந்த குளத்திற்குள் ஓட்டி செல்வதைபோல, உங்களின் மூச்சை அடக்கி கொண்டு நகரத்திற்குள் செல்ல வேண்டும்.
வெளிநாட்டவர்கள் கப்பலில் நீருக்கடியில்தான் பல ஆண்டுகள் தங்கியிருந்தனர். மது அருந்தவும், விடுமுறைக்கும், இதர காரியங்களுக்காக மட்டுமே சில வேளைகளில் அவர்கள் மேற்பரப்புக்கு (நிலப்பரப்புக்கு) வருவர்.
ஒவ்வொரு முறையும் வெளியில் செல்கிறபோது, தொழுகை தொடங்கினால், அவசரமாக செல்லும் மக்கள் கூட்டத்தால் தடங்கல் ஏற்படும். கடைகளும் அடைக்கப்பட்டுவிடும்.
விதிகளை யாராவது மீறுகிறார்களா என்று தொடர்ந்து கண்காணிக்கும் மத பாதுகாவல்காரர்களை கண்டு எல்லா கடை ஊழியர்களும் அச்சம் கொண்டனர்
இளம் சௌதி மக்களின் வாழ்க்கை, அவர்களின் வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த உயர்ந்த சுவர்களின் எல்லைக்குள் உட்பட்டிருந்தது. நகரைச் சுற்றி காணப்பட்ட பரந்த வெறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலங்களில் வீடுகள் மட்டும் ஆண்டுதோறும் விரிவாகி வந்தன.
மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறினார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருக்கும் வீடுகளை பார்த்து மாறி சென்றார்கள்.
அத்தகைய ரியாத் மலையேறி போய்விட்டது.
தடை செய்யப்பட்ட பலவற்றை அனுமதித்து சௌதி அரேபியா திறப்பை ஏற்படுத்தியிருப்பது ரியாத் நகரத்தை உருமாற்றியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் இருந்து வந்த மத பாதுகாவலர்கள் காணாமல் போய்விட்டனர்.
செல்வாக்கு செலுத்துபவராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கும் சௌதி அரேபிய வம்சாவளி இளம் பெண்ணொருவர், எவ்வளவு தடை செய்கிற நகரமாக ரியாத் முன்பு இருந்தது என்று பிபிசி செய்தியாளர் செபாஸ்டின் உஷரிடம் கூறினார்.
ஆனால், சௌதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய நண்பர்களிடம் இப்போது செல்கையில், இந்த இளம் பெண் அவர்களை வட அதிக பிற்போக்கு தன்மையுடையவராக தோன்றும் அளவுக்கு ரியாத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இளம் பெண் இன்னும் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியுள்ளது என்றாலும், பெண்கள் வாகனம் ஓட்டு உரிமையை கடந்த ஆண்டு பெற்றது முக்கியமான தருணம் என்று அவர் தெரிவித்தார்.
அவரது சௌதி தோழிகள் ஆண்களுக்கு இணையாக தங்களின் இடத்தை சொந்தமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.
பல ஆண்டுகளாக பெண்களின் உரிமைகளுக்காக போராடி, சௌதி அரேபியாவின் பாதுகாப்பை சீர்குலைத்து விட்டதாக விசாரணையை எதிர்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நான்கு பெண் செயற்பாட்டாளர்களையம், இன்னும் பிற ஏழு பேரின் பெயர்களையும் இங்கு நான் குறிப்பிடவில்லை. அவர்களை தேச துரோகிகள் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
அவர்களை நடத்திய விதம் புதிய தோற்றத்தை வழங்கும் சௌதியின் அடிநாளத்தில் பதிந்துள்ள ஒரு வடு. ஆனால், அங்கு உண்மையிலேயே மாற்றம் ஏற்படவில்லை என்பதை இது குறிக்கவில்லை.
இதுதான் முரண்பாடு. சௌதியில் இடம்பெறும் சிலவற்றை மக்கள் உண்மையான பிரச்சனைகளை மறந்துவிடுவதற்கு அரசு மக்களுக்கு வழங்கும் இன்ப அளிக்கும் சலுகையாக கருதலாம்.
ரியாத் முழுவதும் திறந்தவெளி சினிமா, திரையரங்குகள் மற்றும் பாப் இசை நிகழ்ச்சிகள் என இரண்டு மாத பொழுதுபோக்கு இப்போது அனுமதிக்கப்படுகிறது.
நான் சௌதி சென்றிருந்தபோது, பார்வையாளர் ஒருவர் தன் மீது வீசிய பெண்கள் அணிகின்ற பிராவை, அமெரிக்க இசைக்கலைஞர் தூக்கி உயர்த்தி அசைத்த காணொளி மிகவும் வைரலாகி இருந்தது.
இவை அனைத்தோடும் சௌதி அரேபியா குளிர்காலத்தின் கற்பனை உலகமாக உள்ளது. ஆனால், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்தான் (சாந்தாகிளாஸ்) கிடையாது.
கரத்தில் வெளிபுறத்தில் அமைந்துள்ள ரியாத் பௌலிவார்டு என்ற பகுதி ஒவ்வோர் இரவும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
முக்கிய வீதியை நோக்கிய வழியில் பிரபலமான அரேபிய பாடகர்களின் பெரிய பதாகைகள் (கட் அவுட்) வரிசையாக உள்ளன.
முகத்தை மூடிய இளம் பெண்கள் அங்கு செல்பவர்களை நறுமணத் தைலங்களை சோதித்து பார்த்து வாங்க சொல்கிறார்கள். நிகாப் அணிந்த ஒரு பெண் பியானோ வாசிக்கிறார். அதிக உணவு லாரிகளுக்கு பக்கத்தில் இசை கலைஞர் கிதார் இசை கருவியை இசைக்கிறார்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து சாப்பிடுவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கும் பல டஜன்கணக்கான உணவகங்கள் அங்குள்ளன. அங்கிருந்து கொண்டே செயற்கை ஏரியில் ஒவ்வொரு மணிநேரமும் விளக்கு நிகழ்ச்சி ஒன்றை அவர்கள் பார்க்கலாம்.
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இரந்த நிலை இப்போதும் இருந்திருந்தால், இத்தகைய காட்சிகள் அனைத்தையும் சௌதி மதக்குருக்கள் கண்டித்திருப்பர். இத்தகைய மதக்குருக்களின் அதிகாரம் பலவீனமாகியுள்ளதாக தோன்றினாலும், அவர்கள் இன்னும் வலிமைமிக்கவர்களாகவே உள்ளனர்.
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானால் கொண்டு வரப்பட்ட தலைகீழ் மாற்றங்களை ஏற்றுகொள்ளாததால், பல மதக்குருக்கள் இப்போது சிறையில் உள்ளனர்.
முஸ்லிம் போதகர் ஒருவரின் இறுதிச்சடங்கு ஒன்றுக்கு நான் சென்றிருந்த ரியாத்திலுள்ள பெரிய மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கான சௌதி ஆண்கள் நிறைந்திருந்தனர். சிறையில் மிக மோசமாக நடத்தப்பட்டதால் இந்தப் போதகர் உயிரிழந்தார் என்று சௌதி மனித உரிமை குழு ஒன்று குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பல வெளிநாட்டவர்கள் காயமடைந்தனர். இதனால், ரியாத்தின் பண்டிகை கொண்டாட்ட கோலம் ஆட்டங்கண்டது.
உருவாகியிருக்கும் மாற்றங்களுக்கு எதிர்வினைகள் இன்னும் உருவாகலாம் என்பதால் உலக நாடுகள் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென இளவரசரின் கூட்டாளிகளும், ஆலோசகர்களும் கூறுகின்றனர்.
ஓராண்டுக்கு முன்னர் துருக்கியிலுள்ள சௌதி தூதரகத்தில் சௌதி முகவர்களால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜியின் கொலை தொடர்பாக செய்தி சேகரிக்க ரியாத் சென்றிருந்தேன்.
இந்த சம்பவம் பற்றிய காட்டுமிராண்டி தனமான, நம்பமுடியாத அரிய விவரங்கள் அனைத்தும் உண்மையாகிவிட்டன என்று சௌதி பதிப்பாசிரியர் ஒருவர் ஒப்பு கொண்டார்.
இப்போது வெளிநாட்டு பிரமுகர்கள் மீண்டும் சௌதி அரேபியாவுக்கு வர தொடங்கியிருப்பதால், இந்த கொலை குறைவான பாதிப்பு ஏற்பட்டதாகவே தோன்றுகிறது. .
ஆனால், அந்த கொலையின் கொடூரம் சௌதி அரேபியா பற்றி உலக நாடுகளுக்கு வரையறுத்து காட்டுகிறது. சௌதி தேசிய அடையாளத்திற்கு கிடைத்திருக்கும் புதிய பெருமையில் முழு நம்பிக்கையோடு இருப்பதாக இளம் சௌதிகள் என்னிடம் கூறினர்.