போராட்டங்களின் எதிரொலி : ஈராக் பிரதமர் ராஜினாமா!
30 Nov,2019
ஈராக்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சதாம் உசேன் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் அரசியல் நிலையற்ற தன்மை உருவானது. இதனையடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்ததால், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது. மேலும் அதிகரித்த ஊழலால் மக்கள் அதிருப்தியடைந்து பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்கள் விளைவாக 400க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.