200 ஹவுதி போராளிகளை விடுவித்தது சவுதி
28 Nov,2019
ஐந்து ஆண்டுகளாக நடக்கும் யேமன் போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி கூட்டுப் படைகள் பிடித்து வைத்திருந்த 200 ஹவுதி போராளிகளை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் சவுதியின் இந்த முடிவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான யேமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்படுகிறது. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இதனிடையே, யேமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
யேமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.