கண்டெய்னரில் மறைந்து கப்பல் மூலமாக அயர்லாந்து செல்ல முயன்ற 16 ஈராக்கியர்கள் பிடிபட்டனர்
22 Nov,2019
பிரான்ஸ் நாட்டில் இருந்து அயர்லாந்து நோக்கி சென்ற கப்பலில் சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த 16 ஈராக்கியர்கள் சிக்கினர்.
இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து வியட்நாமை சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் செர்போர்க் நகரில் இருந்து அயர்லாந்து நோக்கி ஓரு கப்பல் சென்று கொண்டிருந்தது. ரோஸ்லார் துறைமுகத்தில் இருந்தபோது கப்பலில் உள்ள கண்டெய்னரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கண்டெய்னரில் 16 பேர் பதுங்கி இருப்பதை கண்டனர். விசாரணையில் அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் 20 வயது முதல் 40 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.