விசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா!
21 Nov,2019
விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில் 145 இந்தியர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுடன், அவர்களின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், டில்லி வந்ததன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுல் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது