அணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு
10 Nov,2019
அணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு என்று வடகொரியா திடீர் அறிவிப்பை அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து முதன்முதலாக பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதியும், 28-ந் தேதியும் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் சந்தித்து பேசினர். ஆனால் இது இணக்கமாக நடைபெறாமல் பாதியிலேயே முடிந்தது.
மீண்டும் கொரிய எல்லையில் ஜூன் 30-ந் தேதி இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றி தொடர்ந்து பேசுவது என ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஒரு மாநாட்டில் வடகொரியாவின் வெளியுறவு அமைச்சக