ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி
04 Nov,2019
மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார்