ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் யார் என்று தெரியும் - டொனால்டு டிரம்ப்
02 Nov,2019
ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் யார் என்று எங்களுக்குத் தெரியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் புதிய செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா அல்-குரைஷி வாசித்த ஆடியோ அறிக்கையில் அக்டோபர் 31 அன்று ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இஸ்லாமிய அரசின் ஆடியோ அறிக்கை அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார் என உறுதிப்படுத்தியது. இருப்பினும், புதிய தலைவர் குறித்து குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஒரு புதிய தலைவரைக் கொண்டுள்ளது. அவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்! என டொனால்ட் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.