இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது குண்டு வீசப்படும் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
30 Oct,2019
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது குண்டு வீசப்படும் என பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சர் கில்கித் பல்திஸ்தான் அலி அமின் கந்தபூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் பேசியுள்ள காணொலி காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகின்றது.
குறித்த காணொலியில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டால், போரிடுவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை.
எனவே, அந்த வேளையில் பாகிஸ்தானுக்கு பதில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் அனைத்தும் எங்கள் எதிரிகளாக கருதப்பட்டு, இந்தியாவுடன் சேர்த்து அந்த நாடுகளின் மீதும் குண்டு வீசப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பாகிஸ்தான் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது