இந்திய பெருங்கடலுக்குள் சீன போர்க்கப்பல்கள் ஊடுருவ வாய்ப்பு; அமெரிக்கா
30 Oct,2019
இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருகிறது. அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகளும் போன்றவை மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக இருப்பதாகவும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் சீனா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்துள்ளதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இவை நிறுத்தப்படப் போவதில்லை. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது என்றும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.