சிரியாவின் வடக்கில் இருந்து வெளியேறிய அமெரிக்கப் படைகள்!
22 Oct,2019
சிரியாவின் வடக்குப் பகுதியில் இருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் பெறுவது தொடங்கி விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குர்துக்களுடன் இணைந்து போரிட்ட அமெரிக்கப் படைகள் தற்போது அங்கிருந்து புறப்பட்டதாக சிரியாவுக்கான தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குர்துப் படையினர் மீது துருக்கி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 16 போராளிகளும், துருக்கி ராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துருக்கி தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டி உள்ளது. தொடர் தாக்குதலை முன்னிட்டும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் துருக்கி எல்லைப்பகுதியில் முகாமிட்டிருந்த குர்துப் படையினர் வெளியேறி வருவதாக சிரிய ஜனநாயகப் படை தெரிவித்துள்ளது.