நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை!
18 Oct,2019
நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை செய்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு துறையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வருடாந்த அணுசக்தி தயார் நிலை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நீர்மூழ்கிக் கப்பல்கள், இராணுவக் கப்பல்கள் மூலம் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டன.
நிலத்திலிருந்து நடுத்தர தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்துவதில்லை என 1987ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் அமெரிக்கா வெளியேறியது.
இதையடுத்து நடுத்தர தொலைவு ரக ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டமை குறித்து ரஷ்யா அதிருப்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது