ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை!
16 Oct,2019
உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறை அமைச்சர் சைமன் லோகோடோ,
‘தற்போதைய தண்டனைச் சட்டம் சில குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டது. இது ஓரினச் சேர்க்கையைக் குற்றப்படுத்துவதாக மட்டுமே அமைந்துள்ளது.
ஓரினச் சேர்க்கையை ஊக்குவித்தல், அவர்களை பணிக்கு எடுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்.
ஓரினச் சேர்க்கை போன்ற கடும் செயலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, உகாண்டாவில் அமுலிலிருந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.