கலிபோர்னிய காட்டுத்தீ – 1 லட்சம் பேர் வெளியேற்றம்
14 Oct,2019
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை பரவிய இந்தக் காட்டுத்தீயால் 800 ஏக்கர் பகுதி எரிந்து சாம்பலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் உலங்கு வானூர்திகள் மற்றும் விமானங்களின் உதவியுடன் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கலிபோர்னியாவின் பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தெற்கு கலிபோர்னியாவிற்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
89 வயதுடைய மூதாட்டியும், 50 வயதான நபரொருவரும் இதுவரை உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. 76 வீடுகளும், 31 கட்டடங்களும் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளன.