சீனாவில் முன்னாள் மேயரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம் பறிமுதல்!
04 Oct,2019
சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம், பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைக்குவின் முன்னாள் மேயரான 58 வயதான ஸாங் குய், என்பவரின் வீட்டிலிருந்தே குறித்த பெருமளவான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸாங் குய்யின் வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அவரது வீட்டிலிருந்து தங்க பிஸ்கட்டுகள், நகைகள் என 13.5 தொன் தங்கத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதன்போது, 37 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சீனாவில் அதிகபட்ச ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் தற்போதைய இலக்குகளில் ஊழல் ஒடுக்குமுறையும் ஒன்றாகும். அவர் 250 இற்க்கும் மேற்பட்ட முன்னாள் அதிகாரிகளை தவறான செயல்களுக்காக பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.