சிஎன்என் மீது குண்டுதாக்குதலை மேற்கொள்வது குறித்து திட்டமிட்ட அமெரிக்க இராணுவவீரர் கைது
24 Sep,2019
அமெரிக்காவின் முக்கிய ஊடக நிறுவனமொன்றை குண்டுவைத்து தகர்ப்பது குறித்தும் குண்டுகளை தயாரிப்பது குறித்தும் ஆராய்ந்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க இராhணுவீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கன்சாஸ் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
ஜரட் வில்லியம் ஸ்மித் என்ற 24 வயது இராணுவவீரருக்கு எதிராக பேரழிவு ஆயுதங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்,குண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து கற்பிப்பதற்கு முன்வந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
ஊடக நிறுவனமொன்றின் மீது குண்டுதாக்குதலை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஊடக நிறுவனத்தின் தலைமையகத்தை வாகனக்குண்டை பயன்படுத்தி தகர்ப்பது குறித்து ஸ்மித் எவ்பிஐயை சேர்ந்த ஒருவருடன் உரையாடினார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
சிஎன்என் தலைமையகத்தை வாகனக்குண்டின் மூலம் தகர்ப்பதற்கே ஸ்மித் திட்டமிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தனது பணியாளர்களிற்கு விடுத்துள்ள செய்தியில் சிஎன்என் தலைவரும் வோர்னர் மீடியாவின் தலைவருமான ஜெவ் சக்கர் தனது நிறுவனத்திற்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிஎன்என்னின் எந்த அலுவலகத்திற்கும் உடனடி ஆபத்தில்லை என்ற உத்தரவாதத்தை நான் உங்களிற்கு வழங்க விரும்புகின்றேன் என அவர் இதனை தெரிவித்துள்ளாh.
இதேவேளை ஸ்மித் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெட்டோ ஓ ருக் என்பவரை கொலை செய்வது குறித்து ஆராய்ந்தார் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 20 திகதி எவ்பிஐயை சேர்ந்த ஒருவரிடம் ஸ்மித் இதனை தெரிவித்துள்ளார்