அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்;சரக்கு கப்பலை ஈரான் விடுவித்தது ஈரான் திடீர் முடிவு
24 Sep,2019
அண்மையில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் வலுப்பெற்று உள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டால் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறியது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். நிரந்தரமான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச ஈரான் தயராக இருக்கிறது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை மதிப்புமிக்கதாகவும், நிரந்தரத் தீர்வை பற்றியதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானின் இந்த திடீர் முடிவு குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து சரக்கு கப்பலை ஈரான் விடுவித்தது
பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்தின் “ஸ்டெனா இம்பெரோ” என்ற சரக்கு கப்பலை இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே மாதம் 19-ந்தேதி ஈரான் கடற்படை சிறைபிடித்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந்தேதி ஈரானின் சரக்கு கப்பலை இங்கிலாந்து விடுவித்தது. இதையடுத்து, இங்கிலாந்தின் சரக்கு கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டு சரக்கு கப்பலை விடுவித்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “சட்டவிதிகளை மீறியதால் 2 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட “ஸ்டெனா இம்பெரோ” கப்பல் 22-ந்தேதி விடுக்கப்பட்டது. அந்த கப்பல் இன்னும் சில தினங்களில் சர்வதேச கடற்பகுதியை வந்தடையும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.