சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியது யார் ஆதாரம் இல்லை!
19 Sep,2019
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானங்கள் எந்த நாட்டில் இருந்து ஏவப்பட்டன என்பதற்கு ஆதாரம் இல்லை என்று பிரான்ஸ் நாடு கூறியுள்ளது.
எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் யூவிஸ் லீ, எகிப்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சமேஷ் சவுக்கிரியை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜீன் யூவிஸ், சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா குட்டி விமானங்கள் எந்த நாட்டிலிருந்து ஏவப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றார்.
மேலும் எந்த நாடு தான் இதற்கான ஆதாரங்களை வைத்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.பின்னர் பேசிய எகிப்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சமேஷ் சவுக்கிரி, தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை சவுதி அரேபியா விசாரித்து கண்டறிந்த பின்னர், உலக நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.