22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரின் சடலம் ‘கூகிள் எர்த்தால்’ கண்டுபிடிப்பு
16 Sep,2019
‘கூகிள் எர்த்’ (Google Earth) எனப்படும் உலக மாதிரி வரைபடத்தின் மூலம் 22 ஆண்டுகளாகக் காணாமற்போன ஒருவரின் சடலம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவரின் நண்பர் ஒருவர் எதேச்சையாக கூகிள் வரைபடத்தில் தனது முன்னைய வசிப்பிடத்தை மீட்டிப்பார்த்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்போது, ஃபுளோரிடா மாநிலத்தின் ஏரியில் கார் ஒன்று மூழ்கியிருப்பதைக் கூகிள் வரைபடம் காட்டியுள்ளது.
அந்த வட்டாரத்தில் முன்பு வசித்த ஒருவர், தனது பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும் நோக்கில் கூகிளில் தேடியபோது அந்தக் காரை அவதானித்துள்ளார். இதுபற்றி அவர் உடனடியாக பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்படி, காரை ஏரியில் இருந்து வௌியில் எடுத்த போது 1997 இல் காணாமற்போன 40 வயதான வில்லியம் மோல்ட்டின் (William Moldt) எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டில் கேளிக்கை விடுதியை விட்டு புறப்பட்ட போது இறுதியாக அவர் நண்பர்களுடன் உரையாடியிருந்தார். வில்லியம் மோல்ட்டி வசித்து வந்த இடத்துக்கு அருகில் குறித்த ஏரி உள்ளது.
ஆனால் அவர் காணாமற்போன காலக்கட்டத்தில் அந்த பகுதி கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. முதல்முறையாக பொலிஸார் அந்த இடத்தைச் சோதனையிட்ட போது கரையிலிருந்து எதுவும் தென்படவில்லை என்று கூறியிருந்தனர்