அமேசான் காட்டுத்தீயை அணைக்க ரஷ்யா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் பொலிவியா சென்றனர்..!
09 Sep,2019
அமேசான் காட்டுத்தீயை அணைக்க ரஷ்யா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் பொலிவியா சென்றனர்..!
பொலிவியா நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது படைகளை அனுப்பி வைத்துள்ளன.
உலகின் நுரையீரலாக இருக்கும் அமேசான் மழைக்காடுகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது.
இதில் அரிய வகை உயிரினங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. பிரேசில், பாராகுவே, பொலிவியா, பெரு உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருவதற்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ தான் காரணம் என பல தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் காட்டுத்தீயை அணைக்க பொலிவியா நாட்டு அதிபர் ஈவோ மொரேல்ஸ் பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டின் உதவியை நாடினார். அதனை ஏற்று பிரான்ஸ் மற்றும் ரஷ்ய தீயணைப்பு வீரர்கள் பொலிவியா வந்துள்ளனர். மேலும் தீயை தண்ணீர் ஊற்றி அணைப்பதற்கு உதவியாக விமானம் ஒன்றையும் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.