மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு
05 Sep,2019
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகத்தினால் நேற்றைய தினம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்.
இந்தநிலையில் இதனை திட்டமிட்ட வகையில் நிறைவேற்றுமாறு இராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற அனுமதியின்றி எல்லைச் சுவர் எழுப்பவதற்கான நிதியைப் பெறும் வகையில் ட்ரம்ப் அவசர நிலை அறிவித்ததற்குப் பின்னர் முதல் முறையாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.