போர்னியோ தீவுக்கு தலைநகரை மாற்றுகிறது இந்தோனேசியா அரசு!
28 Aug,2019
இந்தோனேசியத் தலைநகரான ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் போர்னியோவில் புதிய தலைநகரை கட்டமைக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது.
3 கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்த்தாவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் புதிய தலைநகரை உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவான போர்னியோவில் புதிய தலைநகரை கட்டமைப்பதென இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.
10 ஆண்டுகளில் அங்கு புதிய தலைநகரம் கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைய உள்ள புதிய தலைநகரத்திற்கு இன்னும் பெயர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய தலைநகரை கட்டமைக்க சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மழைக்காடுகள் நிறைந்த போர்னியோ தீவு இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே நாடுகளின் ஆளுமையில் உள்ளது. இருப்பினும் அந்தத் தீவின் பெரும் பகுதி இந்தோனேசியாவுக்கே சொந்தமானதாகும். நெதர்லாந்தின் காலனி ஆதிக்கத்திடம் இருந்து 1949ஆம் ஆண்டில் இந்தோனேசியா விடுதலை பெற்றது. அன்று தொடங்கி 74 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரத்தை மாற்றுகிறது இந்தோனேசியா