ஜப்பானில் கரையைக் கடக்கவுள்ள புயல்: போக்குவரத்து சேவைகள் இரத்து!
15 Aug,2019
ஜப்பானின் மேற்கு பகுதியில் க்ரோஷா (Krosa) என்ற புயல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த புயல் நாளை கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், புயல் கரையைக் கடக்கும்போது 144 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழையும் பெய்யும் என அறிவித்துள்ளது.
இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டோக்கியோ, நகோயா மற்றும் ஒசாகா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதிப் போக்குவரத்து குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புயல் எச்சரிக்கை காரணமாக 222 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சில மாதங்களில் ஜப்பானில் கரையைக் கடக்கும் மூன்றாவது புயலாக க்ரோஷா புயல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.