வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
10 Aug,2019
அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சி திங்கட்கிழமை அன்று தொடங்கியது. இதைக் கண்டித்துள்ள வடகொரியா, ஒப்பந்தத்தை மீறும் வகையில் அந்த இரு நாடுகளும் செயல்படுவதாக எச்சரித்தது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், வடகொரியா அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இரண்டு ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதித்து பார்த்ததாக தென்கொரியா ஏவுகணை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் வடகிழக்கு நகரமான ஹம்ஹங் நகரில் இருந்து ஜப்பான் கடல் என்று அறியப்படும் கிழக்கு கடலில் ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தப்பட்டதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.