அமெரிக்காவுடன் இணைய முடியாது – பிரித்தானியாவுடன் பேசுகின்றோம் : ஜேர்மனி
02 Aug,2019
!
அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருந்த மிக முக்கிய கோரிக்கை ஜேர்மனிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பெர்சிய வளைகுடா பகுதியில், கப்பல்களை ஈரான் கைப்பற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக போர்க்கப்பல்களை அனுப்பி வைக்குமாறு ஜேர்மனியிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை ஜேர்மனியின் துணை சன்ஸலரான Olaf Scholz நிராகரித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்கா தலைமையிலான கடல் பாதுகாப்பு படையில் தமது நாடு பங்கேற்காது எனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எமது பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய கூட்டாளிகளுடன் பேச விரும்புகிறோம், ஆனால் கோரப்பட்ட கடல் பாதுகாப்பு குறித்து விவாதிக்க விரும்பவில்லை’ எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய எண்ணெய்க்கப்பலான ஸ்டெனோ இம்பீரோ, ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் இணையுமாறு ஜேர்மனிக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.