ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்;
02 Aug,2019
”அல்-கொய்தாவின் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் மரணம் குறித்து கூறியுள்ளார்.
"நான் அதைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது, ஆனால் அவர் நம் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார், அவர் நம் நாட்டைப் பற்றி மிகவும் மோசமான விஷயங்களைச் சொன்னார்" என்று ஹம்ஸா பின்லேடன் மரணம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.
டிரம்ப் நிர்வாகத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக பெயரிடப்படாத அதிகாரிகளை சுட்டிக்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
"அது உறுதிசெய்யப்பட்டால், அவரது மரணம் அல்கொய்தாவுக்கு மற்றொரு அடியைக் குறிக்கிறது, இடைவிடாத அமெரிக்க தாக்குதல்களாலும் இஸ்லாமிய அரசின் எழுச்சியினாலும் அவரது அணிகள் வெறிச்சோடி காணப்பட்டன" என்று தி நியூயார்க் டைம்ஸ் கூறியது.
தி நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, "ஹம்ஸா பின்லேடன் 30 வயதிற்குட்பட்டவர், அவர் பயங்கரவாதத்தின் மிகவும் பிரபலமான பெயரைக் கொண்டிருப்பதால், இளைய பின்லேடன் தனது தந்தையிடம் உள்ள அதே ஈர்ப்பை கொண்டுவர முடியும்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த காரணங்களுக்காக ஹம்ஸா பின்லேடன், அல்கொய்தாவிற்கு ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்திருப்பார் என்று அல்கொய்தா நம்புகிறது என்று அமெரிக்க நாளேடு தெரிவித்துள்ளது.