ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மீது தடை விதித்தது அமெரிக்கா!
01 Aug,2019
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹம்மட் ஜவாட் ஸரீஃப் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்டீவன் முனுச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி சார்பாக செயற்பட்டமையை கருத்திற்கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜவாட் ஸரீஃப், ஈரானின் சிரேஸ்ட தலைவரின் பொறுப்பற்ற நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதாகவும் ஈரானுக்கான உலகளாவிய ரீதியில் முதன்மை செய்தித் தொடர்பாளராக செயற்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தம்மை அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விடயம் என, மொஹம்மட் ஜவாட் ஸரீஃப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.