ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஸா கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவிப்பு
01 Aug,2019
அல் கைதா ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின் லேடன் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
எனினும் இம்மரணம் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அல் கைதா இயக்கத்தின் ஸ்தாகரான ஒசாமா பின்லேடன் 2011 மே 2 ஆம் திகதி பாகிஸ்தானில் அபோடாபாத் நகரில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்
அதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்குவதற்கு ஜிஹாதிகளுக்கு என ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஸா பின் லேடன் அழைப்பு விடுத்திருந்தார்
ஒசாமா பின் லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக கருதப்படும் ஹம்ஸா பின்லேடனை 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
ஹம்சா பின் லேடன் பிறந்த இடம், திகதி குறித்த சரியான விபரங்கள் இல்லை. அவர் சுமார் 30 வயதானவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுவோருக்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.