மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்.
30 Jul,2019
மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலேசியாவில் கடந்த 2016ம் ஆண்டு மன்னராக பொறுப்பேற்ற 5-வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து புதிய மன்னராக, மலேசியாவின் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பத்தினர்களில் ஒருவரான அல்-சுல்தான் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மலேசியாவின் 16வது மன்னராக அவர் முடிசூட்டப்பட்டார். இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.