தென்கொரிய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஸ்ய போர்விமானம்
23 Jul,2019
தென்கொரிய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஸ்ய போர் விமானத்தை எச்சரிக்கும் விதத்தில் தென்கொரிய துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளது.
தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது.
ரஸ்ய விமானமொன்று தென்கொரியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.
செவ்வாய்கிழமை காலை தென்கொரியாவின் வான்எல்லைக்குள் இரண்டு தடவை ரஸ்ய போர்விமானம் அத்துமீறி நுழைந்தது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்கொரியாவும் ஜப்பானும் உரிமை கோரும் தீவிற்கு மேல் ரஸ்ய போர் விமானம் பறந்தது என தெரிவித்துள்ள தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு சில நிமிடங்களே ரஸ்ய விமானங்கள் தென்கொரிய வான்பரப்பில் காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தென்கொரியா தனது எவ்15 எவ் மற்றும் கேஎவ்16 போர் விமானங்களை அனுப்பியதாகவும் அந்த விமானங்கள் ரஸ்ய விமானங்களை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்ததாகவும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
20 எம்எம் ஆயுதங்களை பயன்படுத்தி எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன என தெரிவித்துள்ள தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தனது வான்பரப்பில் அத்துமீறல்கள் இடம்பெற்றது இதுவே முதல் தடவை என தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னதாக சீனாவின் இரு விமானங்களும் தென்கொரியாவின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தன என தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
முதலில் இரு சீனா விமானங்கள் தென்கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாளப்படுத்தும் வலயத்திற்குள் நுழைந்தன அதன் பின்னர் ரஸ்ய விமானங்கள் வந்தன பின்னர் நான்கு விமானங்களும் அந்த வான் பரப்பின் மீது காணப்பட்டன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.