மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்!
18 Jul,2019
மத்திய கிழக்கில் பதற்றநிலை அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஈரானிய, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பிரான்ஸ், ஈரான் இரட்டைக் குடியுரிமையாளரான பரிபா அதெல்ஹா தொடர்பாக தமக்கு எவ்வித விளக்கங்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆராய்ச்சியாளரான பரிபா அதெல்ஹா கடந்த ஜூன் மாதம் ஈரானில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.