ரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்சாலை
12 Jul,2019
ரஷ்யாவானது ஐரோப்பாவையும் சீனாவையும் இணைக்கும் வகையில் தனது பிராந்தியத்தினூடாக சீனாவுக்கு 1,250 மைல் நீளமான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரமளித்துள்ளது.
தனிப்பட்ட ரீதியில் நிதிவசதியளிக்கப்பட்ட இந்த மெரிடியன் நெடுஞ்சாலை பெலாரஸுடனான ரஷ்ய எல்லையிலிருந்து கஸகஸ்தான் வரை சென்று ஹம்பேர்க் பிராந்தியத்திலிருந்து சீனாவின் ஷங்காய் நகர் வரை விரிவுபடும் நெடுஞ்சாலை வலைப்பின்னலின் அங்கமாக அமையவுள்ளது.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பட்டையொன்று பாதையொன்று திட்டத்தின் அங்கமான இந்த நெடுஞ்சாலையை ஸ்தாபிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதை ஸ்தாபிக்கப்பட்டதும் அது ஐரோப்பாவுக்கும் சீனாவுக்குமிடையில் பொருட்களை கொண்டு செல்வதற்கான குறுகிய பாதையாக அமையும்.