சீனாவில் 3 மாகாணங்களை இணைக்கும் மிகப்பெரிய பாலம்!
08 Jul,2019
சீனாவில் 3 மாகாணங்களை இணைக்கும் வகையில் மிகப்பெரிய ‘வளைவு பாலம்’ ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
தெற்கு சீனாவுக்கு உட்பட்ட யுன்னான், குய்சோ மற்றும் சிச்சுயான் மாகாணங்களை இணைக்கும் வகையில் 3 மாகாணங்களின் சந்திப்பு பகுதியில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய பணி, தற்போது ஓரளவுக்கு முடிந்து, முக்கிய கட்டுமான பாகங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
பாலத்தின் கீழுள்ள ஆற்றின் மேற்பரப்பிலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த வளைவு பாலம், 50 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டது என்றும், இதற்கு ‘ஜிமிங்சான்ஷெங் பாலம்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இந்த ஆண்டு இறுதியில் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டு வருகிறது.