ஈரானிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற தயாராகுமாறு ட்ரம்ப் உத்தரவு!
23 Jun,2019
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்ப்பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ஈரானிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற தயாராக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஆரம்ப காலங்களில், இரு நாடுகளுக்கிடையிலான வார்த்தை பறிமாற்றங்கள், தற்போது போரை உருவாக்கும் அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
பொருளாதார தடைகளோடு ஓய்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான மோதல், தற்போது பூதகரமாக வெடித்து, இரு நாடுகளுக்கிடையில் எப்போது போர் மூழும் என உலக நாடுகளை எதிர்பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக ஈரானிலுள்ள அமெரிக்கர்களை பாதுகாக்கும் வண்ணம், ஈராக்கில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவன ஊழியர்களை, எப்போது வேண்டுமானாலும் வெளியேறத் தயாராக இருக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இந்த மோதல், எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மசகு எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணியில் திகழும் ஈரான், ஏனைய நாடுகளுக்கான ஏற்றுதியை தற்போது நிறுத்தியுள்ளது. அத்தோடு, அமெரிக்காவும் ஈரானின் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது என தடை விதித்துள்ளது. இதனால் ஈரான், கடும் ஆத்திரத்தில் உள்ளது.
இதற்கிடையில், ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.