பாரிய உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காகவே ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தினேன்:
21 Jun,2019
பாரிய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் நேற்றையதினம் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது தாக்குதலொன்றை நடத்துவதற்கு அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் இறுதி நிமிடத்தில் இந்த தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதையடுத்து தாக்குதல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தினால் ஈரானிய தரப்பில் ஏறத்தாழ 150 உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என கிடைத்த தகவலையடுத்தே தாக்குதலை ரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்