அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
20 Jun,2019
அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து புகலிடம்கோருவோரின் எண்ணிக்கையிலேயே இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஆண்டு இறுதிவரையான தரவுகளின்படி சுமார் 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகம் என ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு விமானம் மூலம் வந்து புகலிடம்கோரிய 80 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களில் 90 வீதமானவை நிராகரிக்கப்பட்டபோதும் அவற்றைப் பரிசீலிப்பதற்கு அதிக காலம் எடுப்பதுடன் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்கள் அவுஸ்ரேலியாவில் வேலைசெய்வதற்கேற்ற வகையில் bridging விசாவும் வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை அவுஸ்ரேலியாவில் bridging விசாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 2014ம் ஆண்டு 107,000 ஆயிரமாக காணப்பட்ட அதேநேரம் இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு 230,000 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.